.

Pages

Monday, March 21, 2016

பட்டுக்கோட்டையில் நடந்த வேகநடை போட்டியில் M.M.S சஹாப்தீன் சாதனை !

பட்டுக்கோட்டை  நடை பயிற்சியாளர்கள் மன்ற 5 ம் ஆண்டு துவக்க விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நடை பயிற்சியாளர்கள் மன்ற பொதுச்செயலாளர் மூக்கையன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மன்றத்தின் திட்ட அலுவலர் குணசேகர் வரவேற்றார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் மதிவாணன் குத்து விளக்கேற்றினார். 'முதுமையில் இனிமை' என்ற தலைப்பில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் கருத்துரை வழங்கினார்.

கேரளா மாநில மாவட்ட கலெக்டர் பாலமுரளி சார்பில் அவரது  தந்தை தேவேந்திரன், முன்னாள் தலைமையாசிரியர் ரெங்கசாமி, டாக்டர் இக்பால் ஷரீப், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்  கழக தலைவர் முகைதீன் மரைக்காயர், அனந்தகோபாலபுரம் தலைமையாசிரியர் செல்வம், ஓய்வு பெற்ற எஸ்ஐ சுப்பிரமணியன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் வயது வாரியாக நடந்த போட்டியில் 60  வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் M.M.S சஹாபுதீன் முதலிடம், துரைராஜ் இரண்டாமிடம், நாடிமுத்து மூன்றாமிடத்தை பெற்றனர். 50 வயதிற்கு  மேற்பட்டவர்கள் பிரிவில் கவுதமன் முதலிடத்தையும், அன்பழகன்  இரண்டாமிடத்தையும், ரவிச்சந்திரன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். 40 வயதிற்கு  மேற்பட்டவர்கள் பிரிவில் டி.செல்வராஜ், ஏ.செல்வராஜ், குமார் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து பரிசுகளை வென்றனர். மன்றத்தின் துணை பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் நன்றி  கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.