கருத்தரங்கில் வட்டியின் விபரீதங்களும், தீர்வும் என்ற தலைப்பில் தமிழ்நாடு உலமா ஜமாஅத்துல் தலைவர் அப்துர் ரஹ்மான் மிஸ்பாகி, “இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள் வளர்ந்த வரலாறு” என்ற தலைப்பில் இலங்கை ஜமிய்யத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி, “இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளுக்கான அத்தியாவசியம்” என்ற தலைப்பில் ஹபீப் முஹம்மத் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை மதுரை கிளைத்தலைவர் யாசின்முகம்மது, செயலாளர் ஜமான் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்தரங்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது (செயலாளர்), ஏ.எஸ். அஹமது ஜலீல் (துணைச்செயலாளர்), ஏ. முஹம்மது முகைதீன் (துணைத்தலைவர்), பேரா. முஹம்மது அப்துல் காதர் (உறுப்பினர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் அதிரையில் வட்டியில்லா வங்கி அமைப்பது குறித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
நன்றி. மிகவும் அவசியமானது. முயற்சி க்கு வாழ்த்துகள்!!!
ReplyDelete