இந்த மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படும் கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டுக்கு பிரத்தியோகமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அதிரை கடல் பகுதியின் மீனவர் வலையில் சிக்கிய வித்தியாசமான முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது. 5 கிலோ எடை கொண்ட அபூர்வ மீனை பலர் வியப்புடன் கண்டு களித்தனர்.
இது குறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறுகையில்...
'வித்தியாச முகம் கொண்ட இந்த அபூர்வ வகை மீன் ஆள் கடல் பகுதியில் வசிக்க கூடியது. கோழி மீன் என்ற பெயரில் மீனவர்கள் இவற்றை அழைப்பதுண்டு. மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த இந்த மீனை பெரும்பாலானோர் அதியமாக பார்வையிட்டனர்' என்றார்.
இந்த மீனை வாங்கி சாப்பிட்டவர்களின் அனுபவத்தையும் பேட்டி கண்டு சொல்லவும். ருசியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். மீனல்ல; பேட்டி.
ReplyDelete