.

Pages

Thursday, March 24, 2016

உலக காச நோய் தின விழிப்புணர்வு பிராச்சார நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காசநோய் குறித்து  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:
உலக காச நோய் தினத்யொட்டி இது போன்று விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  எந்த நோயாக இருந்தாலும், அதனை தடுக்கும் முறைகளையும், தகுந்த உணவு பழக்கமும், வாழ்க்கை பழக்கமும், அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் 2000 பேர் ஆகும். மருத்துவத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டறிந்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் காச நோயின் பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இது பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை முதல்வர் டாக்டர் க.பிச்சை பாலசண்முகம், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் சுப்ரமணியன் ஜெயசேகர், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிங்காரவேல், துணை இயக்குநர் டாக்டர் எஸ்.ஆர்.சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் ஐ.சுப்ரமணிய ஜெயசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் நலக் கல்வியாளர்  எஸ். அண்ணாதுரை அவர்கள் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.