.

Pages

Wednesday, March 9, 2016

பட்டுக்கோட்டையில் அரசு பேருந்து - லாரி மோதி விபத்து !

பட்டுக்கோட்டையில் இருந்து வடசேரி செல்லும் வழியில் மண்டகபடி சாலை அருகே இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கருரில் இருந்து கிரஷ்ஷர் (ஜல்லி) ஏற்றிவந்த லாரி மீது சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை வந்த அரசு பேருந்து மோதியதில் லாரி நிலை தடுமாறி நாலு சாலை சந்திக்கும் இடத்தில் இருந்த முருகேஷ் என்பவரது பூக்கடையை உடைத்து உள்ளே புகுந்ததில் கட்டிடம் இடிந்து கடையில் இருந்த பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. அந்த இடத்தில் இருந்த மின் கம்பமும் உடைந்து போனதால் அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் பல மணி நேரம் போராடி லாரி டிரைவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

அரசு பேருந்திற்கு அதிக சேதம் இல்லை என்றாலும் பேருந்தில் நல்ல உறக்கத்தில் இருந்த பலருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து லாரியில் இருந்த ஜல்லியினை வேறு வாகனத்தில் மாற்றி வருகின்றனர். இந்த விபத்தினால் வடசேரி செல்லும் சாலையில் பல மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ எம் ராஜா, பட்டுக்கோட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.