தங்சாவூர் மாவட்டம், தங்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் செயல்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் பார்வையிட்டார்.
இன்று 21.03.2016 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தங்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கணினி மயமாக்கப்பட்ட வாக்காளர் சேவை மையத்தை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தங்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சேவை மையங்களில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல் -நீக்குதல் - திருத்துதல் - புதிய/நகல் வாக்காளர் அட்டை பெறுதல் மற்றும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை அறிந்து கொள்ளுதல் தொடர்பான சேவைகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுரியில் அமைக்கப்பபட உள்ள தங்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பயிற்சி ஆட்சியர் திரு. தீபக் ஜேக்கப், தங்சாவூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தங்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ஜெய்பீம், உதவி யெக்குநர் ( நில அளவை ) திரு. குழந்தைவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு மதியழகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் திரு. தங்க. பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.