.

Pages

Thursday, March 17, 2016

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தஞ்சாவூர் சட்ட மன்ற தேர்தலில் முதன் முறையாக பயன்படுத்தப்பட உள்ள யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்களை ( VVPAT ) சரிபார்க்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் வாக்குப் பதிவிற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.  முதன் முறையாக தஞ்சாவ10ர் சட்ட மன்ற தொகுதியில் 1350 வாக்காளர்களுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் வசதியை கொண்ட இயந்திரங்கள் ( Voter Verification Paper Audit Trail ) பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், மாவட்டத்தில் தேர்தல் துரிதமாகவும், சரியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பணிகளும் (SVEEP) மாணவர்கள், அலுவலர்கள், பொது நல அமைப்புகளால் அங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், நேர்முக உதவியாளர் சுரேஷ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.