.

Pages

Wednesday, March 30, 2016

அஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான் அரசு உதவி!

நேற்று அதிகாலை அஜ்மானில், அஜ்மான் ஒன் டவரில் மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டது. டவர் 8 - ல் எரிந்த தீ காற்றின் வேகத்தால் அடுத்துள்ள டவர் - 6 லும் பரவியது. உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பார்கிங் ஏரியாவில் பார்க் செய்த கார்களில் 5 கார்கள் முற்றிலும் தீக்கரையாகின.

இந்த விபத்தால் சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். சில பேர் கார்களில் தங்கினர். உடனடியாக அஜ்மான் அரசு தலையிட்டு இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டது. அஜ்மான் சுற்றுவட்டார சில ஹோட்டல்களில் இவர்களுக்கு சலுகை விலையில் ரூம்களும் வழங்கப்பட்டது. 

1 comment:

  1. அஜ்மான் ஸ்டேட் செய்தது சரி. இதுதான் welfare state என்பது. நம்ம ஸ்டேட்டிலும் வெள்ளப் பேருக்கு வந்ததே!
    அப்போது nillfare state ஆக நின்று, நம் சமுதாய இயக்கங்களின் உதவிகளையும் உணர்வுகளையும் அரசு முத்திரை குத்த அடாவடித்தனம் செய்ததே நமது மாநில அரசு!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.