.

Pages

Sunday, March 20, 2016

எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில மாநாடு, சட்ட கருத்தரங்கம்!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில மாநாடு, சட்ட கருத்தரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது.எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில மாநாடு மற்றும் சட்ட கருத்தரங்கம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கிராண்ட் பேலஸ் ஓட்டலில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.வழக்கறிஞர் அணி மாநில தலைவர் எஸ்.எம்.அப்பாஸ் தலைமை வகிக்கிறார். கட்சியின் துணை தலைவர் நெல்லை முபாரக், பொது செயலாளர் நிஜாம் முகைதீன், வழக்கறிஞர்கள் முத்துகிருஷ்ணன், தாஹீர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெண்கள் அமைப்பின் செயலாளர் ஷாகீரா பானு, மாநில செயலாளர் அமீர் ஹம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் சர்புதீன் அகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி டி.பரந்தாமன் மற்றும் வழக்கறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மாநாட்டில் நீதிததுறையில் அனைத்து சமயயங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பபடவேண்டும். சமீபத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நிஜாம் உள்ளிட்ட மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.