தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆங்காங்கே தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் குடிபோதைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து, வட்டார குழு உறுப்பினர் முனியாண்டி, வட்டார பொறுப்பாளர் பாலு உள்ளிட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து நம்மிடம் கூறுகையில்...
'குடிபோதைக்கு எதிராக கடந்த 3 நாட்களாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'குடிபோதைக்கு எதிரானது எங்கள் குடும்பம்' என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை ஒவ்வொரு வீட்டின் முன்புற பகுதிகளில் ஒட்டிக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். மேலும் போதையால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி வருகிறோம். மக்கள் அதிகாரம் சார்பில் 'மூடு டாஸ்மாக்கை' போராட்டம் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.
"மக்கள் அதிகாரம்" போய் சர்வதிகாரம் தான் இருந்தது ,, தேர்தல் நடத்த விதிமுறை வந்ததால் மூடு டாஸ்மாக் என்று இப்போ சொல்லலாம் முன்னே சொல்லிருந்தால் உள்ளே போட்டுவாங்க மக்கள் அதிகாரம் பெற்ற முதல்வர். தாலிக்கு தங்கம் விதவையாக்க டாஸ்மார்க் தமிழகமெங்கும் பரவியிருக்குது இதை மூடினாலும் கள்ளச்சாரயத்தை ஒழிக்க முடியுமா? அதனால் ஏற்படும் சாவை தடுக்கத்தான் முடியுமா? பிட்டு நோட்டீஸ் கொடுத்தா மக்களிடம் வரவேற்ப்பு இருக்காது பொது இடத்தில் லுங்கி டான்ஸ் போடுங்க .. கூடுமே கூட்டம் கூடும். அரக்கனை ஒழிக்க நல்லதொரு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மக்கள் அதிகாரம் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். 4 டாஸ்மார்க் இருக்கும் இடத்தில் பூஜ்யமாக இருக்கட்டும்.
ReplyDelete