இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...
அஸ்ஸலாமு அலைக்கும், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை நீங்களே ஆன் லைன் மூலமாக சுயமாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மின்சார வாரிய இணையதளத்தில் பள்ளியின் பெயரில் புதிதாக அக்கவுன்ட் திறந்து இதன் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தி வரப்படுகிறது. இதற்காக நமதூரை சேர்ந்த தயாள மனம் படைத்த பலர் அவரவர் வசதிக்கேற்ப நேரடியாக கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
இதே போல் நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப தொகையினை செலுத்தி உதவலாம். ஒரு வருடத்திற்கும் முன் பணமாகவும் செலுத்தலாம். இதில் முக்கிய விஷயம் யாதெனில், நீங்கள் செலுத்தும் தொகை, யார் செலுத்தியது என்பது யாருக்கும் தெரியாது, உங்களுக்கும் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும். சதக்கதுல் ஜாரியா ( நிரந்தரம்மான நன்மை ) அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்று.
கட்டணத்தை செலுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி:
http://www.tneb.in/
user id: Adirai
password: mjm614701
இவற்றை நினைவில் வைத்து கொள்ளவும். இந்த மாத மின்சார கட்டணம் ₹ 5515/ செலுத்த வேண்டும். மாதமாதம் குறைந்த பட்சம் ₹ 500/ அல்லது ₹ 1000/ செலுத்தி நிரந்தர நன்மையை பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Insha Allah.
ReplyDelete