இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், எம்.கே.என் ட்ரஸ்டின் நிர்வாகியுமான நீதிபதி கே. சம்பத் அவர்கள் தலைமையுரையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக பதிவாளர் முனைவர் சி. திருச்செல்வம் வாழ்த்துரையும் வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவித்தனர். பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 650 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பட்டங்கள் வழங்குவதற்கு முன்பாக மாணவ மாணவிகளுக்கான உறுதிமொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் எடுத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் உதுமான் மொய்தீன், துறை சார்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ. கலீலுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லுரி தமிழ்துறை பேராசிரியை சாபிரா பேகம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் ஊர் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு:
ReplyDeleteபட்டம் பெறும் எல்லாத் துறைகளுக்கும் ஒரே நாளில் பட்டமளிப்பு நடத்துவதால், தம் பிள்ளைகள் பட்டம் பெறும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியில் பெற்றோரும் உறவினரும் கலந்துகொள்ள முடியாமல் ஏமாறிப் போய்விடுகின்றனர்!
ஏன், பட்டம் பெறும் மாணவ மாணவியரும் ஆசிரியர்களும்கூட, வெளி வராந்தாவில் அமரும் அளவுக்குக் கூட்ட நெரிசல்!
இதை மாற்ற, துறைகளைப் பிரித்து, மாணவ மாணவிகள் தாராளமாகவும், அவர்களின் பெற்றோரும் உறவினரும் ஆசிரியர்களும் முன்னிலைப் படுத்தப்பட்டும், இரண்டு அல்லது மூன்று நாட்கள் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்தலாமே?
அதிரை நியூஸ், இக்கருத்தைக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்று நம்புகின்றேன்.
(Second thought: பணச் செலவா? காதிர் முகைதீன் கல்வி அறக்கட்டளையிடம் பொருள் கொட்டிக் கிடக்கின்றது. இது, அனைவரும் அறிந்த இரகசியம். Don't worry.)
- அதிரை அஹ்மத் (1965 - 68 B.A. பட்டதாரி)