.

Pages

Saturday, March 26, 2016

உங்களது ஒரு ஓட்டின் மதிப்பு ரூ 87,210, அப்துல்கலாம் ஆலோசகர் பேட்டி !

ஓட்டிற்கு ரூ.500, 1000 கொடுத்தால் வாங்காதீர்கள், உங்களது ஒரு ஓட்டின் மதிப்பு ரூ.87 ஆயிரத்து 210 ஆகும் என அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.

“அப்துல்கலாம் லட்சிய இந்தியா“ கட்சியின் தலைமை வழிகாட்டியும், அப்துல் கலாமின் ஆலோசகராக செயல்பட்டவருமான பொன்ராஜ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் அந்த கட்சிகள் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கொடுக்கத் தவறி விட்டன. இந்தியாவில் 8 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் இல்லை. தமிழகத்தில் 36 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் இல்லை.

இதை மக்களுக்கு கொடுக்க தவறியவை, அ.தி.மு.க., தி.மு.க., மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க. தான். ஒரு நபர் தண்ணீருக்காக 5 ஆண்டுக்கு ரூ.87 ஆயிரத்து 210 செலவிட்டு வருவதாக புள்ளி விவரம் கூறுகிறது. எனவே வேட்பாளர் யாரும் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களிடம் வெறும் ரூ.500, ரூ.1000 என வாங்காதீர்கள். நீங்கள் குடிநீருக்காக மட்டும் 5 ஆண்டுகளில் செலவழிக்கப் போகும் ரூ.87 ஆயிரத்து 210 மட்டும் கேளுங்கள்.

அவர்கள் ஊழல் மூலம் ஒரு ஓட்டிற்கு உங்களுக்கு ரூ.2 லட்சம் கொடுப்பதற்குக்கூட தகுதியானவர்கள். அவர்கள் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு ரூ.1000, ரூ.500 வாங்கி அவர்களை அவமானப்படுத்தாதீர்கள்.

நான் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொன்னால், வாங்காமல் இருக்கப் போகிறீர்களா இல்லை. உங்களுக்கு கொடுக்காமல் தான் இருக்கப் போகிறார்களா இல்லை. பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்கத் தான் முடியுமா?. எதுவும் நடக்கப் போவதில்லை. அப்புறம் ஏன் நீங்கள் உங்கள் ஓட்டின் மதிப்பை குறைக்க வேண்டும்.

நதிகளை இணையுங்கள். கால்வாய்களை பராமரியுங்கள், ஆறுகளை காப்பாற்றுங்கள் என கேளுங்கள். அந்த கோரிக்கைக்கு உறுதி அளித்தால் இலவசமாக ஓட்டுப்போடுகிறோம் என வாக்கு கேட்டு வருபவர்களிடம் கூறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:தினத்தந்தி 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.