.

Pages

Thursday, March 24, 2016

தமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: ஜெயலலிதாவை நாளை சந்திக்கிறார்

மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய தமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் அதன் தோழமை கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ஆதரவு தெரிவித்து வருகின்றன. நேற்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிதாக மனிதநேய ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கிய தமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவும் அனுமதி கேட்டு இருக்கிறார். நாளை தமிமுன் அன்சாரி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

இதே போல் இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கி முத்து ஆகியோரும் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணியில் சேர விரும்புகிறது. அந்த கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பதால் முடிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறைந்த தொகுதிகள் கொடுத்தால் ஏற்க கூடாது என்று த.மா.கா.வில் ஒரு பிரிவினர் கூறுகிறார்கள்.

நன்றி:மாலை மலர்

5 comments:

  1. உள்ளே -வெளியே ; வெளியே - உள்ளே எதோ உங்களுக்கு நியாபகம் வருதோ. திராவிட கட்சிகளுக்கு நம் சமுதாய அரசியல் கட்சிகள் இவ்வாறே கடந்த காலங்களில் ஆதரவு கொடுத்து வந்தது அதனால் சமுதாயத்தில் மாற்றம் வந்ததா என்று யாருக்கும் தெரியாது. புதிதாக கட்சி துவங்கி நாளை ஆதரவு கொடுக்க காத்திருக்கிறார் இதற்க்கு எதிர்ப்பும் ஆதரவும் உண்டு ஆனால் நம் அரசியல் கட்சிகள் என்றைக்காவது சமுதாய மக்கள் பெருபான்மையாக வாழுகின்ற சட்டமன்ற தொகுதியை ஆய்வு செய்ததுண்டா? செய்து பார்த்தால் வியப்பாக இருக்கும். அவருக்கு 5 இன்னொருத்தருக்கு 2 இவருக்கு 1 ஆக மொத்தாம் 8 தாண்டுவது கடினம். 60 ஆண்டு அரசியலில் சமுதாய ஒட்டு முக்கிய பங்களிப்பாக இருக்கு , தலைவருக்கு கிடைப்பது கரித்துண்டு? மொத்த மக்கள் தொகையில் இது ரொம்ப குறைவு தான். எல்லா கட்சியும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தால் அமைச்சரவையில் ஆட்சியில் இடம் கிடைக்கும். திமுக சொல்லிவிட்டது; கூட்டணி ஆட்சி இல்லை ... அமைச்சரவையில் பங்கு இல்லை ... என் குடும்பம் மட்டும் அனுபவிக்கும் என்று அறிவித்து விட்டதால் கூண்டில் மாட்டிய எலியைப் போல் காங்கிரஸ் இருக்கு. சமுதாயமே விழித்தெழு!

    ReplyDelete
  2. இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம்.

    //நம் அரசியல் கட்சிகள் என்றைக்காவது சமுதாய மக்கள் பெருபான்மையாக வாழுகின்ற சட்டமன்ற தொகுதியை ஆய்வு செய்ததுண்டா?// சகோதரர் மஸ்தான் கனி ! நல்ல கேள்வி.

    அதேநேரம் பெரும்பான்மையாக நாம் வாழும் ஊர் மக்கள்தான் ஒற்றுமையாக முடிவு எடுத்ததுண்டா? முடியுமா?

    ReplyDelete
  3. Annaiya neyayam
    manitha neaya makkal katchekkaha
    eppade yeallam pannalama
    ensa Allah, mamaka, iuml,sdpi, palaththal. Dmk, veatre pearum

    ReplyDelete
  4. என்னமோ போங்க

    ReplyDelete
  5. இந்த சமுதாய அமைப்புகள் எல்லாரும் மர்ஹூம் அப்துல் சமது மர்ஹூம் அப்துல் லத்திப் இவர்கள் இரு பிரிவுகளாக இருந்து சமுதாயத்தை துண்டாகித்ட்டாங்க என்று சொல்லி ஆரம்பித்தவர்கள் ஆனால் இவர்கள் எத்தனை பிரிவுகள்.

    இதுல யார் சமுதாய மக்கலை கூர் போட்டார்கள் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் சமுதாயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எல்லாரும் ஒன்று சேரும் வரை யாருக்கும் ஓட்டு போடக்கூடாது இவர்களை எப்படி சமுதாய அமைப்புகள் என்று சொல்லுவது.

    இவர்கள் தான் இஸ்லாத்தில் உள்ள குழப்பவாதிகள் இவர்கள் இஸ்லாத்த்துகாக எதுவும் இதுவரை செய்யவில்லை நான் அன்சாரியை மட்டும் சொல்லவில்லை எல்லா இஸ்லாமிய அமைப்பு குழப்பவாதிகளையும் சொல்லுகிறேன்

    புகாரி தம்மாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.