அதிரை அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 5 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்றம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை லாவண்யா திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஐ நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஏ.அப்துல் முனாப், டி சுப்ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சேர்மன் ஏ.பி.ஜே. சேக் சலீம் சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கெளரவ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் சிறப்புரை வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி, தமிழ்நாடு முத்தமிழ் அறிவியல் மன்ற பொதுச்செயலாளர் வீ. காந்தி லெனின், பட்டதாரி தமிழ் ஆசிரியர் மாநில தலைவர் விழிகள் சி ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பள்ளி குழந்தைகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கல்வியில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மறைந்த மாமேதை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் 'ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம்' துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் 'மனிதநேய காவலர்' விருது டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கும், 'கல்வி வல்லமையாளர்' விருது பேராசிரியர் முனைவர் ஹாஜா முகைதீன் அவர்களுக்கும், 'இலக்கியச்சிற்பி' விருது எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கும், மனிதநேய சேவை' விருது ஆர்.மாரிமுத்து அவர்களுக்கும், 'சேவைச் செம்மல்' விருது போக்குவரத்து உதவி ஆய்வாளர் அபுதல்ஹா அவர்களுக்கும், 'இளம் சாதனையாளர்' விருது எம். ஆக்கிப் அஹமது அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இவற்றை ஏ.பி.ஜே. சேக் சலீம் வழங்கி கெளரவித்தார்.
முன்னதாக டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்ற புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.