.

Pages

Monday, March 14, 2016

அதிரை சேர்மன் திடீர் ஆய்வு !

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவை கொண்டது. தினமும் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள மோட்டார் பம்ப் மூலம் குடிநீர் இரைத்து நீர்தேக்க தொட்டியில் சேமிக்கப்பட்டு மறுநாள் காலையில் விநியோகிக்கப்படும். குடிநீரை நீர்தேக்க தொட்டியில் நிரப்ப 8 மணி முதல் 10 மணி நேரம் பிடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நீர்தேக்க தொட்டியிலிருந்து மேலத்தெரு, கீழத்தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, புதுத்தெரு, ஹாஜா நகர், கடற்கரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் பம்பில் ஏற்பட்ட பழுதை அடுத்து இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து பம்ப் சரிசெய்யப்பட்டு மீண்டும் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் நீர் தேக்க தொட்டியில் குடிநீரை நிரப்ப அதிக நேரங்கள் ( சுமார் 18 மணி நேரங்கள் ) எடுத்துக்கொண்டது.

இதையடுத்து மிலாரிக்காடு மோட்டார் பம்ப் அறை மற்றும் மேலத்தெரு நீர்தேக்க தொட்டியை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மிலாரிக்காடு பகுதியில் பயன்படுத்தப்படும் 30 ஹெச் பி மோட்டார் மிகவும் பழமை வாய்ந்ததால் மேலத்தெரு நீர்தேக்க தொட்டியில் சீராக குடிநீர் நிரப்ப முடியாமல் தாமதம் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோர் அலைப்பேசியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

6 comments:

  1. அப்புடியா?மாஷா அல்லாஹ்.
    ம் கும்

    ReplyDelete
  2. அப்புடியா?மாஷா அல்லாஹ்.
    ம் கும்

    ReplyDelete
  3. மனைவியை அம்மா என்றும் அம்மாவை மனைவி என்றும் அலைக்க. கூடாது.Who is the counsilar of 16 ward

    ReplyDelete
  4. மனைவியை அம்மா என்றும் அம்மாவை மனைவி என்றும் அலைக்க. கூடாது.Who is the counsilar of 16 ward

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.