பிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக அவ்வப்போது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வாசகர் பக்கத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார். இவரது பல கோரிக்கைகள் அவ்வபோது பிரசுரமாகி வருகிறது.
இதில் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணியை துரிதப்படுத்தக் கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 17-02-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.
இந்நிலையில் அதிரையில் அதிகரித்து வரும் பொதுமக்கள், வர்த்தகம், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக செக்கடி மேடு, மேலத்தெரு, சிஎம்பி லேன், கடற்கரைத்தெரு, முத்துப்பேட்டை ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் ஏடிஎம் சேவையை தொடங்க வலியுறுத்தி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை நேற்று 08-03-2016 வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.
பேராசிரியர் அவர்களுக்கு ஏன் வாழ்த்துகள் ....
ReplyDeleteஉங்கள் சமுதாய பணி மென்மேலும் தொடரட்டும் .....
வெளிநாடு சென்றோமா காசு சம்பாரித்தோமா ஊருக்கு வந்து காசை செலவு செய்தோமா கோழிபிரியாணி, ஆட்டுக்கறிபிரியாணி சாப்பிட்டோமா, இரவானால் சாராயத்தை குடித்தோமா காசு முடிந்தால் அடுத்தவரிடம் கடனாக பணத்தை வாங்கி செலவு செய்தோமா என்று நமதூரில் சிலர் இருக்கும் நிலையில் ஊருக்காக ஊரின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete