.

Pages

Tuesday, May 31, 2016

உள்ளாட்சி தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் கலந்தாலோசனைக் கூட்டம் !

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் தலைமையில் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சீனிவாசன் அருகில் உள்ளார்.

மரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப். கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில்  பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.
 

Monday, May 30, 2016

கொடியேற்று நிகழ்ச்சி அழைப்பு !

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் எதிர்வரும் [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து ஊர்வல பேரணி நடைபெற உள்ளது. பின்னர் அதிரை பவித்ரா திருமண மஹால் ஈசிஆர் சாலையில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை கலந்துகொள்ள உள்ளார்.

இதையொட்டி அழைப்பு பணியில் அதிரை சேர்மன் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்த்ரசேகர். தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்தபோது எடுத்த படங்கள்.
 
 

அதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா !



இன்று மாலை (30.05.2016) அதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த 10 தினங்களாக ALM பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வந்த கோடைக்கால பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

முகாமில் கற்பித்தவைகளிலிருந்து பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

அஃப்ஸலுல் உலமா, ஷஃபான் ஸித்தீக்கியா ஆலிமா அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வாய்ப்புள்ளோர் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன் அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம்

Sunday, May 29, 2016

மரண அறிவிப்பு ! [ கோஸ் முஹம்மது அவர்கள் ]

ஒரத்தநாடு மர்ஹும் சி.க.மு சேக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் P.K.S.A அசன் பாவா ராவூத்தர் அவர்களின் மருமகனும், சி.க.மு முஹம்மது அமீன் ( சிங்கப்பூர் ) அவர்களின் மாமனாரும், கவிஞர் அன்புடன் புஹாரி( கனடா ) ,காலித், சகாபுதீன், ஹாஜா அலாவுதீன், பகுருதீன், அதிராம்பட்டினம் A. சேக் அப்துல்லா ஆகியோரின் மச்சானும்,  சி.க.மு ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய கோஸ் முஹம்மது அவர்கள் இன்று காலை தஞ்சாவூர் அருளானந்த நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தஞ்சை ஆற்றாங்கரை பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்

Saturday, May 28, 2016

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது விழா அழைப்பு!

அதிராம்பட்டினம் மே-28
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ-மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு பரிசுகள் - பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா எதிர்வரும் [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு

தக்வா பள்ளி மையவாடி நுழைவாயிலில் புதிதாக மேற்கூரை அமைப்பு !

அதிராம்பட்டினம் மே-28
அதிராம்பட்டினம் மையப்பகுதியில் அமைந்துள்ளது தக்வா பள்ளி. இதன் எதிரே அமைந்துள்ள மையவாடியில் (  கஃப்ர்ஸ்தான் ) இப்பகுதியை சேர்ந்த மஹல்லாவாசிகளின் இறந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இறுதி சடங்கு நிகழ்வில் மையவாடிக்கு வருகை தரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மையவாடியின் நுழைவாயிலில் நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்க கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் நிதிஉதவியுடன் மையவாடி நுழைவாயில் பகுதியில் புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவிப்பு [ டீ கடை முஹம்மது யூனுஸ் அவர்கள் ]

மர்ஹும் சீனி முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் வெங்காயம் நெய்னா முஹம்மது, செய்யது ஆகியோரின் சகோதரரும்,
மெக்கானிக் முஹம்மது, அப்துல்லா, அசாருதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜெஹபர் அலி அவர்களின் மாமனாருமாகிய டீ கடை முஹம்மது யூனுஸ் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்

அதிரையில் 18 அடி தார் சாலையுடன் கூடிய வீட்டு மனைகள் விற்பனை !

அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகே பரந்த நிலப்பரப்பில் புதிதாக 'ஆதம் நகர்' வீட்டு மனைகள் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மனைகளை ஏராளமானோர் பார்வையிட்டு முன்பதிவு செய்து வருகின்றனார்.

இதுகுறித்து மனைப்பிரிவின் உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில்...
எங்கள் மனைப்பிரிவு அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 அடியில் பிரதான மற்றும் உட்பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை ஈசிஆர் சாலை இணைப்பு முதல் மனைப்பிரிவு வரை அமைக்கப்பட்டுள்ளது.

மனைப் பகுதியில் மின் இணைப்பு வசதியும், கழிவு நீர், வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனைப்பகுதியை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடன் வீடு கட்டி குடியேறலாம்.

குறைந்த மனைகளே உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். மனைகளை முன் பதிவு செய்து உடன் பத்திரப்பதிவு செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது' என்றனர்.
தொடர்புக்கு
9944432292 / 9750044349

கடற்கரைத்தெருவில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு !

கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்தும் 5 ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று [ 27-05-2016 ] இரவு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடற்கரைதெரு ஜமாத் கெளரவ ஆலோசகர் அக்பர் ஹாஜியார் தலைமை வகித்தார். கடற்கரைதெரு ஜமாத் தலைவர் என்ஜீனியர் எம் அஹமது அலி, அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊடகவியலரும், அரசியல் விமர்சகர்மாகிய ஆளூர் ஷாநவாஸ் 'ஆசைப்படுங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 'பயனுள்ள கல்வி' என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை ஹதிஜா மகளிர் கல்லூரி தாளாளர் பேராசிரியை சயிதா பானு உரை நிகழ்த்தினார்.

முன்னதாக ஜமீல் எம் ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் நன்றி கூறினார்.

இதில் அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், மஹல்லாவாசிகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத்  ( மாணவ செய்தியாளர் )

 

மரண அறிவிப்பு [ மீன் வியாபாரி அப்துல் ஜப்பார் அவர்கள் ]

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகனும், மர்ஹூம் நூஹு,  ஹசன் , முகைதீன், வாழைக்காய் என்கிற இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரவூப் அவர்களின் மச்சானும், ஜாஹிர் உசேன், ஜெஹபர் சாதிக், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாரும், சகாபுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய மீன் வியாபாரி அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 28-05-2016 ] காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, May 27, 2016

பள்ளி வாகனங்கள் ஆய்வு ! [ படங்கள் ]

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் வாகனங்களின் ஆண்டு தணிக்கை நடவடிக்கைகள் நடைபெற்றதை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சுதாகர் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் கல்வி மாவட்ட மாவட்டத்தில் 57 பள்ளிகளைச் சேர்ந்த 247 வாகனங்களும், பட்டுக்கோட்டை 35 பள்ளிகளின் 196 வாகனங்கள் ஆக மொத்தம் 92 பள்ளிகளைச் சேர்ந்த 443 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 வாகனங்கள் தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

Thursday, May 26, 2016

மலேசியாவில் அதிரையர் வஃபாத் !

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த காலஞ்சென்ற K.M. ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் மகனும், O.M அப்துல் ஹையர் அவர்களின் மருமகனும், K.M அஹமது ஹாஜா, K.M அஹமது சிராஜுதீன் ஆகியோரின் மைத்துனரும், முஹம்மது ஆபிதீன், முஹம்மது அர்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி J. நிஜாம் முகைதீன் அவர்கள் மலேசியா கோலாலம்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பு !

அதிராம்பட்டினம் மே-26
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி எதிர்வரும் [ 30-05-2016 ] அன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.