பட்டுக்கோட்டை, மே-13
மக்களை சந்திக்காமல் ஆட்சி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
பட்டுக்கோட்டையில் நேற்று ( வியாழக்கிழமை ) இரவு இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே. மகேந்திரனை ஆதரித்து அவர் மேலும் பேசியது:
கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 94 லட்சம் பேர் வேலையில்லாமல், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். திமுக கூட்டணி வெற்றி பெற்று எங்கள் ஆட்சி அமைந்ததும் வேலையில்லாமல் இருக்கும் 94 லட்சம் பேருக்கும் படிப்படியாக வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவோம்.
அன்று காமராஜர் ஆட்சியில் தினம் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இன்று ஜெயலலிதா ஆட்சியில் தினம் ஒரு தொழிற்சாலை மூடப்படுகிறது. தரக்குறைவான மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறியை தந்து மக்களை ஏமாற்றினார். அண்மையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில்
100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்து பரிதவித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத ஜெயலலிதா இன்று எப்படியாவது மக்களை ஏமாற்றி, மீண்டும் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை நகரை சுற்றி, சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதே நேரம் 93 வயதான கருணாநிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருிள்களை வழங்கி ஆறுதல் கூறினார். ஜெயலலிதா பொறுப்பில் இருக்கிறார். மக்களைப் பாதுகாக்கும் கடமை அவருக்கு இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற எதுவும் செய்யாமலிருந்து விட்டு இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார். இது என்ன நியாயம்?
திமுக, காங்கிரஸ்காரர்களை விரட்டியடியுங்கள் என்று ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார். ஆனால் மக்கள் அதிமுகவினரையும், அமைச்சர்களையும்தான் விரட்டியடித்தனர். மக்களை சந்திக்காமல் ஆட்சி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதாதான். நன்றி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர், எல்லோரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர் ஜெயலலிதா. இந்த தேர்தலில் அவருக்கு மக்கள் கொடுப்பது மரண அடியாக இருக்க வேண்டும்.
9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காமராஜர் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அடிமை விலங்கை உடைத்தெறிந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர் சிறைவாசம் அனுபவித்தார். ஆனால் லஞ்சம், ஊழல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர நினைப்பது நியாயமா?
ஜெயலலிதா ஆட்சியில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. யானைக்கு காட்டிய பரிவை மக்களிடம் அவர் காட்டவில்லை. இதுபோன்ற தீய சக்திகளை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும். தமிழக மக்கள் சுபீட்சமாக வாழ 234 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.