.

Pages

Saturday, May 21, 2016

பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள் கெளரவிப்பு !

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கம் இஸ்லாமியப் பயிற்சி மையம். இந்த மையம் கடந்த 4 ஆண்டுகளாக பிலால் நகரில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் சிறுவர் சிறுமிகளுக்கு அடிப்படை இஸ்லாமியக்கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்விக் கூடத்தில் சுமார் 136 சிறுவர் சிறுமிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி கற்று வருகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் குரான் ஓதும் பயிற்சி, குர்ஆன் எழுத்துப்பயிற்சி, சூரா மனனம், துஆ மனனம், பேச்சு பயிற்சி, இஸ்லாமிய வரலாறு உள்ளிட்டவை தகுதி வாய்ந்த ஆலிமாக்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு கல்வி பயிலும் சிறுவர் சிறுமிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ஆண்டு இறுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியை ஆலிமா செளதா அஹமது ஹாஜா தலைமை வகித்தார்.

இதில் கிராத் போட்டி, சூரா மனனம், துஆ மனனம்
பேசுக்கலை போட்டி, வினாடி-வினா, இஸ்லாமிய வரலாறு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை தாருத் தவ்ஹீத் செயலர் ஜமீல் M. ஸாலிஹ், பொருளாளர் மீடியா மேஜிக் நிஜாமுதீன், பயிற்சி மையத்தின் ஆசிரியைகள் செளதா அஹமது ஹாஜா, ஜாஸ்மீன் கமாலுதீன், ஹைருனிஷா அஹமது, பெமினா அஹமது நலீம் உள்ளிட்ட ஆலிமாக்கள் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இதில் ஆறுதல் பரிசுகள் உட்பட மொத்தம் 130 பரிசுகள் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் கடந்த 3-1/2 ஆண்டுகளாக இஸ்லாமிய பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துகொண்ட 40 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.