தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் 1 முதல் 21 வார்டு பகுதிகளிலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மகேந்திரன் வாக்கு சேகரிப்பில் இன்று மாலை ஈடுபட்டார்.
இதில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா. இராமநாதன், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பளார் பிரகாஷ், அதிரை பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் முஹம்மது முகைதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக் பாட்சா, துணை செயலாளர் தமீம், மமக அதிரை பேரூர் செயலாளர் ஹாலித், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், சேக் அப்துல்லா, ஜமால் முகம்மது, மணிச்சுடர் சாகுல் ஹமீது, அபூபக்கர், உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் பலர் உடன் சென்றனர்.
பட்டுகோட்டை தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் தோற்கடிக்க வேண்டும்., பெருபான்மையான மக்கள் வாழும்பகுதியில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் காரர்களுக்கு மனசு வரல.,சீட்டு கேட்டும் கொடுக்காதவர்களுக்கு நல்ல தீர்ப்பு சொல்ல சரியான நேரமிது. " எரிகிறதை புடுங்கினா தான் கொதிக்கிறது அடங்கும்".
ReplyDelete