.

Pages

Saturday, May 14, 2016

ஜித்தா மெப்கோ நிகழ்ச்சியில் ஏராளமான பரிசுகளை தட்டிச் சென்ற அதிரை மாணாக்கர்கள்!

ஜித்தாவில் இயங்கி வரும் மெப்கோ (Muslim Educational Promotional Counsel) சார்பாக நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் அதிரையைச் சேர்ந்த ஏராளமான மாணாக்கர்கள் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தமிழக ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கு முழு உதவித் தொகை வழங்கி முழு கல்விப் பொறுப்பையும் ஏற்று வரும் ஜித்தா மெப்கோ அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான , கிராத், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதன் பரிசளிப்பு நிகழ்ச்சி 13-05-2016 வெள்ளியன்று மாலை ஜித்தா லக்கி தர்பார் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான அதிரை மாணாக்கர்கள் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர். வினாடி வினா போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து தமிழக மாணவர்களில் இருவர் அதிரையைச் சேர்ந்த மாணாக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவுலான சம்சுதீன் காசிமி முஸ்லிம்களின் கல்வி அவசியம் குறித்து விளக்கமளித்தார். மேலும் அவரது தலைமையில் இயங்கும் இல்மி குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.