.

Pages

Monday, May 16, 2016

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா டுடே, ஏபிபி, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகியவற்றின் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பதால் இவை கவனம் பெறுகின்றன.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக- ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 7 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன.

அதிமுக பெரும்பான்மை: டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு

அதிமுக - 139, திமுக - 78, பிற கட்சிகள் - 17.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: ஏபிபி கருத்துக்கணிப்பு

திமுக - 132, அதிமுக - 95, பாஜக - 1, பிற கட்சிகள்- 6.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95, திமுக கூட்டணிக்கு 132, பாஜகவுக்கு 1, மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு

திமுக : 114 -118, அதிமுக: 95 - 99, பிற கட்சிகள் 27.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 114- 118 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

திமுக: 124- 140, அதிமுக: 89 - 101, பிற கட்சிகள்: 4- 11

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 89- 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124- 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-11 இடங்களும் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு

திமுக : 129 -151, அதிமுக: 81 - 99, பிற கட்சிகள்: 2 - 6

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 81- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 129- 151 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2- 6 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட 5 கருத்துக்கணிப்புகளில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை பெறும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி, இந்தியா டுடே, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகிய நான்கு கருத்துக்கணிப்புகளிலும் திமுக பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்

2 comments:

  1. நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் 70% வாக்கு பதிவாகி இருப்பதாலும் ஆறுமுனை போட்டியாலும் மேலும் புதிய இளம் வாக்காளர்களாலும் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்பது மிகவும் குழப்பமாகவே அமைந்துள்ளது

    ReplyDelete
  2. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கணிக்கப்பட்டது. அதே நிலவரம்தான் தற்போதும் (அதாவது ஓட்டு பதிவிற்கு பின்னர்). எனவே, தி. மு. க. வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவே தெரிகிறது; இருந்தாலும் பீகார் தேர்தல் முடிவு போல் இருந்தால் .....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.