.

Pages

Wednesday, May 25, 2016

மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இன்று மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது: 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 42 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி எழுதினார்கள். 33 ஆயிரத்து 426 மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 95.39 ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம், காந்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த எம்.அபிராமி என்ற மாணவி  500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மாவட்ட அளவில் 500க்கு 497 மதிப்பெண் பெற்ற 5 மாணவ மாணவியர்களான பட்டுக்கோட்டை செயிண்ட் இசபெல்ஸ் பள்ளியைச் சேர்ந்த எஸ்.காயத்ரி, எம்.எஸ்.மனுஸ்ரி ரேக்ஸனா, சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேனிலைப்பள்ளி மாணவன் எம்.முகிஸ்தான், பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக் மேனிலைப்பள்ளி எம்.வி.நந்தினி, தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வி.ஸ்ருதி ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.

மேலும், தஞ்சாவ10ர் தூய இருதய பெண்கள் மேனிலைப்பள்ளி எம்.லெட்சுமி, ஆக்ஸீயம் மேனிலைப்பள்ளி ஆர்.லிசாராகவி, கும்பகோணம் ஸ்ரீமாதா மெட்ரிக் மேனிலைப்பள்ளி கே.வி.பிரபாவதி,  பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மேனிலைப்பள்ளி ஜெ.சபானாமேத்தா, திருவையாறு அமல்ராஜ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி டி.சண்முகபிரியா, தஞ்சாவூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஸ்ரீராம் பரத்வாஜ் ஆகியோர் மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர்.

இம்மாணவ மாணவியர்கள் அனைவரையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன் அவர்கள் சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மதிவாணன் (பட்டுக்கோட்டை), கேசவன் (தஞ்சாவூர்), அண்ணாபிள்ளை (கும்பகோணம்) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் குமரகுருபரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நெடுஞ்செழியன், ராமலிங்கம், செஞ்சிலுவை சங்க செயலாளர் எஸ்.ராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.