தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் சென்னை மக்தப் தல்லீம் கமிட்டி இணைந்து மக்தப் விழிப்புணர்வு மாநாடு போட்டிகள் கும்பகோணத்தில் நடந்தது. இதில் கிராத் போட்டியில் அதிரை சிறுவர்கள் கலந்துகொண்டு முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ சாகுல் ஹமீது. பத்திரிகை நிருபர். இவரது மகன் அஸ்பக் அஹமது ( வயது 13 ) அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ.ஜே முஹம்மது நெய்னா. இவரது மகன் அப்துல் ஜப்பார்( வயது 13 ).
கும்பகோணத்தில் நேற்று நடந்த மக்தப் விழிப்புணர்வு மாநாட்டு கிராத் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை அஸ்பக் அஹமதும், இரண்டாம் இடத்தை அப்துல் ஜப்பாரும் பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர். வெற்றி பெற்ற இருவருக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை நிகழ்த்தியுள்ள சிறுவர்களுக்கு பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
முதல் இடம் பிடித்துள்ள சிறுவன் அஸ்பக் அஹமது அதிரையில் நடந்த பல்வேறு இஸ்லாமியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் - பாராட்டு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah
ReplyDeleteமாஷா அல்லாஹ்..! எனது உடன் பிறந்த தம்பி கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah
ReplyDelete