.

Pages

Friday, May 20, 2016

அரேபியர்கள் ஆட்சி செய்த ஐரோப்பாவின் அழகிய தீவு !

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு சிசிலி(Sicily). இது இத்தாலிய தீபகற்பத்தின் தெற்கே ஒரு குறுகிய ஜலசந்தியால் அதனோடு பிரிக்கப்பட்டுள்ளது.

இது இத்தாலியின் பாதம் போல, ஒழுங்கற்ற ஒரு முக்கோண அமைப்பில் காணப்படுகிறது.

இந்த தீவின் முக்கிய அடையாளமாக இருப்பது ஐரோப்பாவின் உயரமான (3329 மீ) மலையான எட்னா(Mount Etna) தான். இது உலகில் உயிர்ப்போடு இருக்கும் எரிமலைகளில் ஒன்று.

தலைநகர் பலெர்மோ(Palermo)
இந்த நகரம் நாளுக்குநாள் தன்னுடைய காட்சியை மாற்றிக்கொள்ளும் விரைவாக இயங்கும் நவீன வளர்ச்சி மிக்க ஒரு நகரம்.

அங்கே பழமை படிந்த அருங்காட்சியங்கள், அரேபியர் கால குவிமாடங்கள், செழுமையும் மூர்க்கத்தனமுமான சந்தைகள். குழப்பமான போக்குவரத்து, கோடை வெப்பமும் கொண்ட ஒரு ஆபத்தான நகரமாக இருந்தாலும் எப்போதும் கண்கவர் நகரமாகவே காட்சியளிக்கும்.

பெரும்பாலும் தீவுகள் என்றாலே அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம் நவீனம் குறைந்து காணப்படுவதே இயல்பு. ஆனால், சிசிலியில் அப்படியல்ல, ஆதிகாலத்திலே ரோமானியர் கலாச்சாரம் உலகப்பெருமை மிக்கது.

அந்த ரோமனியர்கள் சிசிலியிலும் வாழ்ந்திருக்கின்றனர். என்பதால் ஒரு மேன்மையான கலாச்சாரம் புகழும் அளவில் இங்கு பொங்குகிறது.

உடைகள்
விழாக்களில் இவர்கள் அணியும் உடைகள் கண்கவர் வேலைப்பாடுகள் மிகுந்தது.

அலங்கரிக்கப்பட்ட குதிரைவண்டியில் செல்வது இன்னும் இவர்களுடைய பாரம்பரியங்களில் ஒன்றாக பின்பற்றப்படுகிறது.

சந்தைகள்
பெரிய அளவிலான சந்தைகள் சகல பொருள்களின் வர்த்தகத்தையும் கொண்டது. கடை அருகில் செல்பவர்களை சிசிலி பாஷையில் கூவி அழைப்பதே ரசனைதான்.

அங்கு விற்கும் பழங்கள், காய்கள், மீன்கள், இறைச்சிகள், பதார்த்தங்கள், பொருள்கள் என எல்லாமே விற்கும் முறை உட்பட ஒரு வித்தியாசம்தான். ஒரு புதிய உலகுக்கு சென்றுவந்த புத்திகொள்வோம்.

ஓவியங்கள்
அரண்மனைகளிலும் அருங்காட்சியங்களிலும் தரை மற்றும் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் பழங்கால ஓவியங்கள், வேட்டை, விவசாயம், வழிபாடு, கலைநிகழ்ச்சிகள் என அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையை கற்பிக்கும் ஜீவனுள்ளதாக இன்னும் வாழ்கிறது. பயணிகள் மனதை பறிக்கிறது.

கேடானியா(Catania) 
கிரேக்கர், ரோமானியர், அரபு, நோர்மன், ஸ்பெயினியர் என பல பேரரசர்களுக்கு கேடானிய நகரம் ஒரு பரிசாக திகழ்ந்தது. அங்கு ஒரு பயங்கரமும் இருக்கிறது. அதன் கொல்லைப்புறமாக இருக்கும் எட்னா எரிமலைதான்.

1693 ல் எரிமலை கக்கிய பாறைக்குழம்பாலும்(Lava) பூகம்பத்தாலும் அந்த நகரமே அழிவுக்கு உள்ளானது. பாரோக் கட்டடத்தில் அந்த தாக்கத்தின் எச்சம் இன்னும் உள்ளது.

சிராகஸ்(Syracuse)
சிசிலியின் தென்கிழக்கே உள்ள கடற்கரை நகரம். 1.25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரில் அழகிய ஹார்பர் பிரபலமானது. இது ஓர்டிஜிய தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகால வரலாறு
இந்த தீவின் 3000 ஆண்டுகள் பழமையான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை இடிபாடுகளோடு கிடக்கும் கட்டடங்கள், அந்த அழிவிலும் அடையாளம் காட்டும் கட்டடகலை நுட்பங்கள், நமக்கு சொல்கிறது.

கி.மு.1200 களில் அங்கு மனித செயல்பாடுகள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு.750 ல் மூன்று ஃபோனீசிய 12 கிரேக்க காலனிகளும் இருந்துள்ளன.

அடுத்த 600 ஆண்டுகளில் அது சிசிலியன் போர் மற்றும் புனிக் போர்கள் நடக்கும் தளமாக இருந்துள்ளது. அந்த போரில் கார்தேஜின் ரோமக் குடியரசு (கி.மு.149) முடிவுக்கு வந்துள்ளது.

ரோம சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக்குப் பிறகு, வாண்டல்ஸ், ஓஸ்ட்ரோகோத்ஸ், பைஸண்டைன் பேரரசு, சிசிலி எமிரேட்ஸ் போன்ற பல ஆட்சிகள் அங்கு மாறிமாறி நடந்துள்ளது.

அரேபியர்கள் ஆட்சி
சிசிலியில் (கி.பி.827- 1091) அரேபியர்கள் ஆட்சி நடந்ததற்கு சான்றாக சுல்தான் அரண்மனை, மசூதிகள் இன்னும் இங்கு உள்ளன.

கதீட்ரல் கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டதற்கு பிறகு எற்பட்டவை இவை. சிசிலி மொழியிலும் சில அரபுச்சொற்கள் இன்னும் உள்ளன.

இங்கு உள்ள பல தொல்லியல் தளங்கள், கோட்டைகள், உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிசிலியின் தன்னாட்சி
ஆயிரம் ஆண்டுகால பயணத் தொடர்பை வைத்து, சிசிலி இத்தாலியின் ஒரு பகுதியாக 1860 ல் அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, கரிபால்டி தலைமையில் ஒரு எழுச்சி ஏற்பட்டதால், இத்தாலிய அரசியலமைப்பின் வாக்கெடுப்பை வைத்து, 1946 ல் சிசிலிக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.