அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் தொடர் தூறல் மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இடி இடித்து வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகமெங்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாக்காளர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு சதவீதம் குறையவும் வாய்ப்புள்ளதால் இன்று நடைபெறும் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய வாக்காளருக்கு ருபாய் 500 ம் மற்றவர்களுக்கு ரூபாய் 300 ம் வழங்கப்பட்டது சிலருக்கு கொடுக்காமல் கட்சிக்காரர்கள் பதுக்கி கொண்டார்கள் இருந்த போதிலும் பணம் பட்டுவாடா 4 1/2 மணிநேரத்தில் அள்ளி கொடுக்கப்பட்டது., பட்டுகோட்டை தொகுதியை தேர்தல் நடத்தாமல் தொகுதியை பொது ஏலம் விடட்டும்., ஜனநாயகத்தை விட பணநாயகம் முக்கியமாக இருப்பதால் தேர்தல் தடை செய்ய வேண்டுமென்று சமூக நல விரும்பிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.., சொம்பு அடித்தாலும் சரியாக அடிக்கணும்
ReplyDelete