தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ-மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு பரிசுகள் - பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா எதிர்வரும் [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் குழு
அதிரை நியூஸ் மற்ற சேனல்களை விட ஹைடெக் ல் புதுப்பொலிவுடன் வர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரை நியூஸ் மென்மேலும் சமூக சேவைகள் செய்து அனைவரது மனதிலும் இடம் பிடித்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteசுயநல மற்ற பொதுநலதொண்டுசெய்யும் அதிரைநியூஸ் நிர்வாகிகள் அனைவர்க்கும் அல்லாஹ் தன்அன்பையும் அருளையும் பொழிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
ReplyDelete