.

Pages

Sunday, May 15, 2016

இந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை


ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் லா நீனாசலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியத்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது.

இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், வெப்ப சலனத்தின் இந்த ஆண்டு மத்தியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து லா நீனாஎன்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். அந்த லா நீனாகாரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நா. துணைப் பொதுச் செயலர் ஸ்டீஃபன் ஓபிரையன் கூறியதாவது:

வெப்ப சலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் லா நீனா’, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். வெப்ப சலனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும்.

வெப்ப சலனம் காரணமாக ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடி பேர், அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், “லா நீனாவால் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றார் அவர்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Pattukkottai Taluk.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.