சரி விசயத்திற்கு வரும்வோம்...
அதிரையை சேர்ந்தவர் அன்வர். இவரது மகன் சேக். அமெரிக்காவில் பணியாற்றி விட்டு உள்ளூரில் தங்கிருந்து சுய தொழில் தொடங்க முடிவெடுத்தவர் நேராக மதுரை சென்று அங்குள்ள தேனீ வளர்ப்பு பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் ஊர் திரும்பியவர் சொந்தமாக தேனீ வளர்ப்பில் தற்போது ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக தென்னந்தோப்புகளில் தேன் கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து அதிரை வரலாற்றில் முதன் முறையாக தேன் வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் சேக் நம்மிடம் கூறுகையில்...
தேனீ வளர்ப்புக்காக மதுரை சென்று அங்கு சிறப்பு பயிற்சி பெற்றேன். பின்னர் ஊர் திரும்பியவுடன் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். மக்களுக்கு நியாயமான விலையில் சுத்தமான தேனை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதில் ஈடுபட்டு வருகிறேன். தென்னை தோப்புகளில் பெட்டிகள் மூலம் தேனீக்கள் வளர்க்கப்படுகிறது.
சுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணமுடையது. குறிப்பாக குண்டு உடம்பு இளைக்க, செரிமானம், சளி, காய்ச்சல், மூட்டு வலி என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தேன் தேவைப்படுவோர் முன்பதிவு பதிவு செய்வது அவசியம். இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.
Masha-Allah. Really appreciate your effort to get into new venture of growing honey bee. Having Honey is sunnah, that too home grown and pure makes it more halal.
ReplyDeleteHope you succeed in this venture. Good luck Sheik.
தேனீ வளர்ப்பில் ஈடுபடுங்கள்; திகட்டத் திகட்ட வருவாய் ஈட்டுங்கள்!- வாழ்த்துக்கள்
ReplyDelete