தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம், பிதார் மாவட்டத்தில் பறவைச் காய்ச்சல் ( Bird Flu) நோய்க்கிளர்ச்சி பண்ணைக்கோழிகளில் ஏற்பட்டதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வனத்துறையினர் வெளிநாட்டிலிருந்து. மற்ற மாநிலங்களிலிருந்து வரக்கூடிய பறவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவற்றை கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பேரூராட்சிகள், ஊராட்சிகளில் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்தும், சுகாதாரத்துறையுடன் தேவையான மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்தும் அறிவுறுத்தினார். கால்நடைத் துறையினர் தொடர்ந்து கால்நடைகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். பொது மக்கள் தங்கள் பகுதியில் கால்நடைகளை கால்நடைத் துறை மூலம் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பொது மக்கள் எவ்வித அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் பறவைக் காய்ச்சல் நோய் இல்லை. எனவே நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை தைரியமாக சாப்பிடலாம்.
ஒரு வேளை நாம் வாங்கும் கோழி இறைச்சியில் நோய்கிருமி இருந்தாலும், அது கோழிக்கறி சமைக்கும் போது அழிந்துவிடும். 70 டிகிரி வெப்பத்தில் பறவைக்காய்ச்சல் வைரஸ் அழிவது நிச்சயம்.
முழுக்கோழியை அப்படியே சமைப்பது கூடாது. ஏனெனில் கோழியின் உடலின் அனைத்துப் பகுதிகளில் வெப்பம் எட்டாமல் போய் விடலாம். அரைவேக்காட்டில் சமைத்த கோழி அல்லது முட்டை உண்ணக்கூடாது.
பச்சை (Raw Egg) அல்லது அரைவேக்காடு முட்டை (Half Boiled Egg) சாப்பிடக் கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது முழுமையாக பொரித்த ஆம்லெட் சாப்பிடலாம் என கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அறிவுத்தப்படுகிறது.
ஆய்வுக்கூட்டத்தில் கால்நடைத்துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜசேகரன், வனத்துறை அலுவலர் சங்கரலிங்கம், பொது சுகாதார துணை இயக்குநர் டாக்டர் போத்திபிள்ளை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இளங்கோவன், கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் இராஜகோபால், டாக்டர் ராஜகோபால், இராசேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.