நிகழ்ச்சிக்கு கடற்கரைதெரு ஜமாத் கெளரவ ஆலோசகர் அக்பர் ஹாஜியார் தலைமை வகித்தார். கடற்கரைதெரு ஜமாத் தலைவர் என்ஜீனியர் எம் அஹமது அலி, அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊடகவியலரும், அரசியல் விமர்சகர்மாகிய ஆளூர் ஷாநவாஸ் 'ஆசைப்படுங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 'பயனுள்ள கல்வி' என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை ஹதிஜா மகளிர் கல்லூரி தாளாளர் பேராசிரியை சயிதா பானு உரை நிகழ்த்தினார்.
முன்னதாக ஜமீல் எம் ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் நன்றி கூறினார்.
இதில் அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், மஹல்லாவாசிகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.