தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 156 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 90 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவீட 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.
அதேபோல் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 194 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 92 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 56 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 93 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவீட 3 சதவீதம் கூடுதலாக பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள மாணவிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர்: ஹபிலா
த/பெ: ரஹ்மத்துல்லாஹ்
பெற்ற மதிப்பெண்கள்: 1134 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் இடம்:
பெயர் : சஹ்ரீன் பானு
த/பெ : ஹாஜா அலாவுதீன்
பெற்ற மதிப்பெண்கள் : 1107 / 1200
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் இடம் :
பெயர்: தஹ்ஸினா மரியம்
த/பெ: ஷாகுல் ஹமீது
பெற்ற மதிப்பெண்கள்: 1091 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
நான்காம் இடம் :
பெயர்: ஜெஸிலா பாத்திமா
த/பெ: அஹமது மன்சூர்
பெற்ற மதிப்பெண்கள்: 1088 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
"மதி"ப்"பெண்கள்" . வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமுதலில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள் இரண்டாவது தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள் இது முடிவல்ல " வாசலுக்கு வா வாழ்கையை தேடு " உனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவே இந்த தோல்வி உமக்கு பரிசாக கிடைத்துள்ளது மாணவ செல்வமே ....இனியாவது நம் கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் மதிபெண் முறையை ரத்து செய்யவேண்டும் தரமான கல்விக்கு இந்திய அரசு உறுதி தரவேண்டும் மானியத்தை கொடுப்பதை விட்டுவிட்டு படிப்பிற்கு இலவசங்களை அறிவிக்க வேண்டும் தொழிலதிபர்களை காப்பது போல நமது நாட்டு மாணவர்களின் கல்வி அனைவருக்கும் அனைத்தும் இலவசமாக படிக்கவைக்க வேண்டும் கட்டண கல்விமுறையை ரத்து செய்ய வேண்டும். மாற்றம் நிகழும்... மனதை தளராதே!
ReplyDelete