.

Pages

Monday, May 16, 2016

தஞ்சை மாவட்டத்தில் 77.44 % வாக்குப்பதிவு ! ( முழு விவரம் )

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைக்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது ; 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றது.

ஆங்காங்கே சிறிது மழையெனினும், தேர்தல் ஆணையத்தின் அழைப்பினை ஏற்று வாக்களித்த வாக்காளர் அனைவருக்கும் நன்றி.  அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்த வாக்கு சதவிகிதம் 77.44 பதிவாகியுள்ளது. இதில் ஆண்கள் 601935 (75.7 சதவிகிதம்) பெண் வாக்காளர்கள் 657119  (79.75 சதவிகிதம்) வாக்களித்துள்ளனர்.

7 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, வைப்பறையில் சீலிட்டு வைக்கப்படும்.  இம்மையத்திற்கு  மூன்றடுக்கு பாதுகாப்புடன் சீலிட்டு வைப்பறையில் முத்திரையிட்டு வைக்கப்படும். வேட்பாளர்கள், முகவர்கள்  பார்வையிடலாம்.

திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 90102 ஆண் வாக்காளர்களும் (76.74 சதவிகிதம்), 93730 பெண் வாக்காளர்களும் (80.70 சதவிகிதம்), மொத்தம் 183832 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  (78.55  சதவிகிதம்)

கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 92438 ஆண் வாக்காளர்களும் (75.89 சதவிகிதம்), 95238 பெண் வாக்காளர்களும் (76.52 சதவிகிதம்), மொத்தம் 187676 வாக்காளர்களர் வாக்களித்துள்ளனர் (76.21 சதவிகிதம்)

பாபநாசம்  சட்ட மன்ற தொகுதியில் 88047 ஆண் வாக்காளர்களும் (73.98 சதவிகிதம்), 93212 பெண் வாக்காளர்களும் (76.94 சதவிகிதம்), இதர வாக்காளர்கள் 9 பேரும் ஆக மொத்தம் 181268 பேர் வாக்காளர்களர் வாக்களித்துள்ளனர் (75.47 சதவிகிதம்)

திருவையாறு  சட்ட மன்ற தொகுதியில் 99373 ஆண் வாக்காளர்களும் (81.43 சதவிகிதம்), 102254 பெண் வாக்காளர்களும் (81.24 சதவிகிதம்), மொத்தம் 201627 பேர் வாக்காளர்களர் வாக்களித்துள்ளனர் (81.33 சதவிகிதம்)

ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 83528 ஆண் வாக்காளர்களும் (75.59 சதவிகிதம்), 95521 பெண் வாக்காளர்களும் (83.50 சதவிகிதம்), மொத்தம் 179049 வாக்காளர்களர் வாக்களித்துள்ளனர் (79.61 சதவிகிதம்)

பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 73306 ஆண் வாக்காளர்களும் (67.13 சதவிகிதம்), 91441 பெண் வாக்காளர்களும் (77.52 சதவிகிதம்), இதர வாக்காளர்கள் 5 ஆக மொத்தம் 164752 வாக்காளர்களர் வாக்களித்துள்ளனர் (72.52 சதவிகிதம்)

பேராவூரணி சட்ட மன்றத் தொகுதியில் 75141 ஆண் வாக்காளர்களும் (74.10 சதவிகிதம்), 85723 பெண் வாக்காளர்களும் (82.46 சதவிகிதம், மொத்தம் 160864 வாக்காளர்களர் வாக்களித்துள்ளனர் (78.33 சதவிகிதம்)

7 சட்ட மன்றத் தொகுதிகளிலும் 601935 ஆண் வாக்காளர்களும் (சதவிகிதம் 75.07) 657119 பெண் வாக்காளர்களும் (சதவிகிதம் 79.75) இதர வாக்காளர்கள். 14 மொத்தம் 1259068 (சதவிகிதம் 77.44) வாக்களித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நில அளவை உதவி இயக்குநர் திரு.குழந்தைவேல், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள்  ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.