.

Pages

Sunday, May 22, 2016

ஆலடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை !

அதிராம்பட்டினம் மே-22
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் பணிகள் நடந்தது. மேலும் ஆலடி குளம், செக்கடி குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர் இறைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. பம்பிங் மூலம் இறைக்கும் ஆற்றுநீரை முதலில் ஆலடிக்குளத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களுக்கும் நீர் இறைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலடி குளம் நீர் வரத்தை இன்று காலை அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குளத்தில் சூழ்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
 
 

3 comments:

  1. வாழ்துக்கல்
    தலைவரின் முயர்சிக்கு கிடைத்த வெற்றி

    ReplyDelete
  2. வாழ்துக்கல்
    தலைவரின் முயர்சிக்கு கிடைத்த வெற்றி

    ReplyDelete
  3. Jaakallahu Khairan for all you do.. Why is the Kulam so dirty. Looks like its dumpster with plastics. Can any action be taken to keep it clean

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.