.

Pages

Sunday, May 22, 2016

ஒரு தெருவுக்கே செல்லப்பிள்ளையான கன்றுக்குட்டி !

முத்துப்பேட்டை பேட்டைத் தெரு பிச்சுமணி வீட்டில் வளர்கப்படும் பசு ஈன்ற கன்றுக்கு வயது 10 மாதங்கள். அந்த கன்று மனிதர்களுடன் பழகிவிட்டது. இப்போது அதன் செயல்பாடுகள் எல்லாமே வீட்டில் உள்ளவர்களுடன் பாசமாக இருப்பது தான்.

காலையில் வீட்டில் உள்ளவர்கள் தூங்கி எழுந்துவிடும் அந்த கன்று தூங்குவது பிச்சுமணியின் மகன் தூங்கும் பாயில் தான். காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் பார்த்து தலையசைப்பது வாடிக்கை.

யாராவது மாடிக்கு ஏறினால் அவர்களுடன் மாடிக்கு ஏறி விளையாடிவிட்டு இறங்கும் கன்று வீட்டில் உள்ளவர்களை குரல் கொடுத்து அழைக்கும் அதன் அழைப்பை யாராவது புறக்கணித்தால் கண்ணீர் வடிய அழும். அதனால் கன்று அழைக்கும் நேரத்தில் அருகில் செல்வர்.
   
வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது தலை அசைத்து பாய்... பாய்... சொல்வது போல வழி அனுப்பும் கன்றுக்கு வெளியே சென்றவர் வீட்டுக்கு வரும் போது நொறுக்கு தீனியுடன் வரவேண்டும். இல்லையேல் வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தை போல எதிர்பார்த்து கிடைக்கவில்லை என்று அழும்.

அதனால் இந்த கன்று அந்த வீட்டிற்கு மட்டுமின்றி அந்த தெருவுக்கே செல்லப்பிள்ளை தான்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.