.

Pages

Wednesday, May 11, 2016

அதிரை பாரூக் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஏற்க மறுப்பு !

அதிராம்பட்டினம் மே-11
அதிரை பேரூர் காங்கிரஸ் கட்சி செயலாளராக பொறுப்பில் இருந்தவர் அதிரை பாருக். இந்த நிலையில் தான் வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

இது தொடர்பாக அதிரை பாருக் நம்மிடம் கூறுகையில், 'கடந்த 09.05.2016 திங்கள் அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக திரு.சௌத்ரி அவர்கள் இரண்டு தடவை என்னிடம் நீண்ட நேரம் இது தொடர்பாக செல்போனில் உரையாடல் நடந்தது. அதன்பிறகு காங்கிரஸ் துணைத்தலைவர் திரு.ராகுல் அவர்கள் அதே நாள் மாலை 6.19- மணிக்கு என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். உடனடியாக விமானத்தில் டெல்லி வருமாறு எனக்கு காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா மற்றும் ராகுல் அவர்கள் அழைப்பு விடுத்தனர். எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என சோனியா அவர்களும், ராகுல் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுடன் அவசர ஆலேசானையில் ஈடுபட்டுள்ளனர். திரு.சௌத்ரி அவர்களிடமும், திரு.ராகுல் அவர்களிடமும் தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் எனது எதிர்கால திட்டம் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் விளக்கம் கொடுத்துள்ளேன்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.