.

Pages

Sunday, May 15, 2016

வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு !

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் சட்ட மன்ற தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலுள்ள 2175 வாக்குச்சாவ மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொருட்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப் படுகின்றன.   தேர்தல் பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.  வாக்குப்பதிவுக்காக முன்னேற்பாடாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

1113 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி தயார் நிலையில் உள்ளது.   1200 வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.  வாக்குச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் 10 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம்.

ஓவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடி மகளிர்க்காகவும்,  தொகுதிக்கு 2 வாக்குச்சாவடிகள், அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

3500 காவல் துறை அலுவலர்களும், 260 வாக்குப்பதிவு மையங்களில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள VVPAT இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.பா.சுரேஷ், வட்டாட்சியர் திரு.தங்க பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.