தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் 4-1/2 மணி நேர மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானர்கள்.
அதிராம்பட்டிம மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மதுக்கூர் வாடியக்காடு 33 கே.வி.ஏ துணை மின் நிலையத்தின் மின் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் மின் பாதையில் ஏற்பட்ட திடீர் பழுதால் சுமார் 4-1/2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இரவு நேர திடீர் மின்தடையால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நேற்றிரவு 8 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.
ReplyDelete9.45 வரை மின்சாரம் வரவில்லை.
பக்கத்துவீட்டில் குடும்பத்தலைவர் தனது மகனைக் கூப்பிட்டு மின்சார வாரிய ஆபீசுக்கு போன் செய்து எத்தனை மணிக்கு மின்சாரம் வரும் என்று கேட்கச் சொன்னார்.
அவர் மகனும் போன் செய்து எத்தனை மணிக்கு மின்சாரம் வரும் என்று கேட்டார்.
ஆனால்
அவர் கேட்டது மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளரிடம் அல்ல.
உள்ளூர் கட்சியின் நகரச் செயலாளரிடம்.
( முகநூல் பதிவு)