தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மஸ்ஜீத் தவ்பா பள்ளி வாசலில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை நடைபெற்றது. இதில் எம்.எஸ் செய்யது இப்ராஹீம் ஜும்மா உரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன் பராமரிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-2 ஏற்றுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-2 மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது:
'இறைவனின் மாபெரும் கிருபையால் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இந்த பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்றைய ஜும்மாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இட நெருக்கடியால் பள்ளிவாசல் வெளிப்பகுதியிலும் தொழுகையாளிகள் அமர வைக்கப்பட்டனர்.
இதன் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பணிகள் தொடர்ந்து நடந்திட தங்களால் இயன்ற அளவு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்' என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
Today onwards in CMP lane area there are two times athaan even ramalan month also ,so CMP lane people are will be confuse in future be careful.
ReplyDeleteASSALAMU ALAIKKUM BROTHER GOOD
ReplyDeleteCapture good innovation
THANKYOU FOR ALLAH