இதுதொடர்பாக நிறுவன உரிமையாளர் ஹாஜி முஹம்மது சலீம் நம்மிடம் கூறியதாவது...
அதிரையில் முதன் முதலாக சூரிய ஒளியில் 3 HP பம்ப் செட் 3M சோலார் நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமதூரை சேர்ந்த காலஞ்சென்ற கா. யூனுஸ் காக்கா மகன் ஹாஜி தமீம் அன்சாரி அவர்களின் தென்னை தோப்பில் முதல் முறையாக சூரிய ஒளி பம்ப் செட் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் 3 HP பம்ப் செட் நிறுவ ரூபாய் 3.5 இலட்சம் வரை செலவானது, இப்பொழுது வெறும் 2.40 லட்சம் செலவில் நமதூரில் நிறுவப்பட்டு வெற்றிகரமாக, செடியன் குளம் அருகே உள்ள அவர்களின் தோப்பில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
மேலும் வீடுகளுக்கான சூரிய ஒளி அமைக்க, இன்வெர்ட்டர் பேட்டரிகளுடன் சூரிய மின் உற்பத்தி தகடுகள் பொருத்தி கொடுக்கிறார்கள். இதனால் மாதாந்திர யூனிட்டுகள் குறைக்கப்பட்டு மின்கட்டணம் குறையவும், தடையில்லா மின்சாரம் அனுபவிக்கவும் உதவியாக இருக்கும்.
ஏர் கண்டிஷன் பயன்படுத்தவும் இப்பொழுது சலுகை விலைகளில் சூரிய ஒளி மின்சாரம் அமைத்து தரவும், 3M சோலார் நிறுவனத்தார் ஏற்பாடு செய்து வருகிறார்கள். குளிர்காலங்களில் பயன்படக்கூடிய சோலார் வாட்டர் ஹீட்டரும் நமதூரில் பல வீடுகளுக்கு வழங்கியுள்ளோம்.
நமதூரைப் பொறுத்தவரை இது பற்றிய விழிப்புணர்வு மிக மிக குறைவு. சோலார் பேனல் குறித்து மக்களிடம் எடுத்துச்செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம்' என்றார்.
விழுப்புணர்வு இருக்கு ., அரசு இலவசமாக மின்சாரத்தை கொடுக்காதா என எதிர்ப்பர்த்திருப்பதால் மக்கள் அதிக தொகை செலுத்த முன்வரவில்லை. மற்ற மாநிலங்களில் சோலார் பேணல் விலை குறைவாக இருக்குதுன்னு சொல்லுறாங்க ., விலை குறையும் போது மக்கள் இதனை நாடுவார்கள்.
ReplyDeleteமஸ்தான் கனி சொல்வது உண்மை சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு சில மானியங்களை அறிவித்துள்ளது அவற்றை மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுங்கள்
ReplyDeleteமஸ்தான் கனி சொல்வது உண்மை சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு சில மானியங்களை அறிவித்துள்ளது அவற்றை மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIt's true that the government had announced subsidy for Solar power but it is not so easy to avail that facility due to lot of paper work is there and even if it is sanctioned you will not get the subsidy as sanctioned because you will have to loose more than half of the sanctioned amount by way of bribing and much more for transportation to Tanjore and Pattukkottai by visiting the respective office and the officers. By: 3M solars
ReplyDeleteநன்றி தங்கள் பதிவுக்கு; மத்திய அரசு நபார்டு வங்கி மூலம் விவசாய நீர் பாசன தேவைக்காக; 3 எச்.பி., பேனல் அமைக்க ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் செலவாகும். இதில் அரசு மானியமாக ரூ.ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 வழங்கப்படுகிறது; பயனாளிடமிருந்து 2,17,400 பெறப்படுகிறது. நீங்கள் சொல்லும் தொகை 2,40,000/- ( எந்த சிரமமில்லாமல் பெற ) வித்தியாசம் குறைவு தான். இதே சர்வீஸ் காரைக்குடியில் சலீம் என்பவரும் செய்கிறார் அவர் வழங்கும் சூரிய ஒளி தகடுக்கு 25 ஆண்டும், பம்பு கட்டுப்பாட்டு கருவிக்கு 5 ஆண்டும் உத்தரவாதம் கொடுக்கிறார்., இதேப போல் நீங்களும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வியாபாரம் பெருக துஆ.
Deleteஇன்ஷா அல்லாஹ் எங்களாலும் அதே உத்தரவாதத்துடன் தர முடியும். ஆனால், காரைக்குடி நண்பரிடம் அவர் சொல்லும் தொகை, லாரி வாடகை, வேலையாட்கள் சம்பளம் இதர நிர்மான செலவுகள் சேர்த்தா என தெரிந்து கொள்ளவும். எங்கள் விலை எல்லா செலவுகளும் சேர்ந்தது.
Delete