பிரான்ஸ் என்றதுமே சட்டென்று நம் அனைவரின் நினைவுக்கும் வருவது உலக அதிசயமான ஈபிள் கோபுரம் தான். அதுமட்டுமா 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்கு கொண்ட நாடாகவும் பிரான்ஸ் விளங்கி வருகிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்:
19 ஆம் நூற்றாண்டில் சுற்றுலாவாசிகளால் மிகவும் கவரப்பட்ட இந்த இடம் தற்போது, பிரபலமான கடலோரம் சார்ந்த இடமாக உள்ளது, வியத்தகு வில்வளைவுகள் மற்றும் ஊசி வடிவங்கள் போன்று இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த கடற்கரை ஓரம் நீங்கள் நடந்துசெல்வது இனிய அனுபவமாக இருக்கும்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்:
Dinan
கலாசாரம் நிறைந்த இந்த இடத்தில் உள்ள தெருக்கள் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன, 1.8 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடக்கலைகள், மேலும் இங்குள்ள clock tower - யினை பார்ப்பதற்கு 158 படிகள் ஏறிச்செல்வேண்டும்,நீங்கள் இந்த clock tower - யின் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், கீழுள்ள நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை பார்க்க தவறிவிடாதீர்கள், மேலும் யூலை மாதத்தில் வார இறுதியில் Fête des Remparts திருவிழா நடக்கும், இந்த திருவிழா கொண்டாட்டங்கள் பல்வேறு பராம்பரியங்கள் கொண்டு நன்றாக நடைபெறும்.
Etretat
Arbois
மிகவும் கிராமமான இடமாகும், ஆனால் நீங்கள் ஒயின் பிரியர்களாக இருந்தால் இந்த இடத்திற்கு தாராளமாக வரலாம், இங்கு தான் முதல் திராட்சை தோட்டம் 1936 ஆம் ஆண்டு பயிரிடப்பட்டது என்ற பெருமையை கொண்டுள்ளது.மிருதுவான மலை காற்றினை சுவாசிக்க ஏற்ற இடம் ஆகும், கோடை காலத்தில் இங்கு அதிகமான மக்கள் படையெடுப்பார்கள்.
Saint Emilion
பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் உள்ள கட்டிடங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மஞ்சள் நிற சுண்ணாம்பு அடிக்கப்பட்டு காணப்படும், அது மட்டுமின்றி இங்கு திராட்சைக்கு பஞ்சமிருக்காது.
Eze
கண்களுக்கு விருந்தளிக்கும் இளஞ்சிவப்பு நிறத்திலான மலர்கள், மிக அழகிய கட்டிடங்கள் நிரம்பிய இடம். நீங்கள் தனிமையில் அழ வேண்டும் என ஆசைப்பட்டால் கூட, இந்த இடத்திற்கு வந்துவிடுங்கள், உங்கள் அழுகையை நிறுத்தக்கூடிய அகலப்பரப்பு காட்சிகள் இங்கு இருக்கிறது, மேலும் உங்கள் மூக்கு நல்ல வாசனையை நுகர வேண்டும் என்று ஆசைப்பட்டால் இங்குள்ள மலர்களை நுகர்ந்து பாருங்கள்.இப்பகுதியில் நல்ல தரத்துடன் கூடிய வாசனை திரவியங்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.