தஞ்சாவூர், ஆக. 15
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 73-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.08.2019) தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 175 பயனாளிகளுக்கு 1 கோடியே 27 இலட்சத்து 57 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில 11 பயனாளிகளுக்கு ரூ.27,500 மதிப்பிலும், தாட்கோ மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.58,21,381 மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 49,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.67,674 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 09 பயனாளிகளுக்கு ரூ.17,30,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,10,000 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.42,600 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.9,520 மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.43,37,407 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.11,063 மதிப்பிலும், மீன்வளத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பிலும், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.1,27,57,875 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 71 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இவ்விழாவில் திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நலக் குழுமம், தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை ரெஜினா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அன்னை கல்லூரி ஆகிய பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், சிவக்குமார், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கஜா புயல் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.