.

Pages

Thursday, August 8, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 69-வது மாதாந்திரக்கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 69-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 02-08-2019 அன்று ரியாத் மாநகர் ஹாராவில் இனிதே நடைபெற்றது.           

நிகழ்ச்சி நிரல்:
கிரா அத்           இக்பால் ஹமீது
முன்னிலை     S. சர்புதீன்         (தலைவர்)
வரவேற்புரை P.  இமாம்கான்   (கொ.ப.செ.)
சிறப்புரை       A.M அஹ்மது ஜலில் (செயலாளர்)                         
மாத அறிக்கை   மன்சூர் ஷேக் (துணை செயலாளர்)
நன்றியுரை         A. சாதிக் அகமது   (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் ABM ன் குர்பானி திட்டம் தொடர்பாக பைத்துல்மால் தலைமையகத்திலிருந்து அனுப்பிய கடிதம் (25-07-2019) அமர்வில் வாசிக்கப்பட்டு இந்த வருடம் அதிகம் கூட்டுக் குர்பானி மற்றும் தனிநபர் குர்பானித் திட்டத்திற்கு ABM.க்கு முழு  ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ABMன் கூட்டுக்குர்பானி (மாடு) பங்கிற்கும் தனிநபர்(ஆடு) குர்பானிக்கும் பெயர்கள் கொடுத்த வண்ணம் உள்ளார்கள்.  இன்ஷாஅல்லாஹ் வரும் சனிக்கிழமை (10-08-2019) வரை தங்களின் பெயர்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ABM ன் குர்பானி திட்டத்தின் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த மிகவும் உறுதுணையாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவரும் இந்த குர்பானி திட்டத்தில் கலந்துகொண்டு முழு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளபட்டது.

வேண்டுகோள்:-
ABM தலைமையகத்திற்க்கு குர்பானி திட்டத்தின் சேவையை எவ்வித குறைபாடின்றி சரியான நேரத்தில் முறையாக செம்மையாக முழு திருப்தியுடன் பொதுமக்களுக்கு சேவை ஆற்றிடுமாறு வேண்டுகோள் வைக்க தீர்மானம் போடாப்பட்டது                                                             

அயல் நாடுகளில் கிளைகள் உருவாக்குவதற்கு அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கனடா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழும் நமதூர் வாசிகள் பெருநாள் தினத்தை முன்னிட்டு அதிரை வருபவர்களை கண்டறிந்து ABM சேவைகளை எடுத்துரைத்து ABM கிளைகள் உருவாக்க தலைமையகம் முயற்சி செய்ய வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அதிரை மக்களின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் இதனை சரியான பாதையில் அரசாங்கத்திடமிருந்து நிர்வாகிகளிடமிருந்து பெறுவது மிகவும் கடினமாக மாறி உள்ளது. அதன் பொருட்டு நாம் அனைவரும் நமதூர் நலனுக்காக நம் சமுதாய நலனுக்காக.(பொது விஷயங்களில்) மட்டும் ஒன்று சேர்ந்து புதிய தலைமை மூலம் (AGRA வை போல்) ஒரு அமைப்பு உருவாக்கி இயக்கங்கள், சங்கங்கள், மஹல்லாஹ் ஒன்றாக இணைத்து பொதுச்சேவையை செய்யத்தொடங்கினால் நம் சமுதாய நலனுக்காக அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டியதை எளிதில் பெறலாம்.

நமதூரில் சமீப காலமாக உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளது (வயது வரம்பு இன்றி) அதை மனதில் வைத்துக்கொண்டு முதலுதவி செய்ய பயிற்சி மற்றும் உடற்பயிற்சி முறைகளுக்கு மருத்துவமனை மற்றும் சேவை மையங்களுக்கு ABM முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறோம்.

அமர்வில் புதிய பழைய உறப்பினர்கள். மற்றும் ஜித்தாவில் இருந்து வந்த அய்டா உறுப்பினர் AMK அகமத் மன்சூர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கண்ணியமிக்க முகம்மது யூசுப் ஆலிம் அவர்களுக்காகவும், ABM முஹல்லா நிர்வாகி ஹாஜி ஏ வாப்பு மரைக்காயர் அவர்களின் சகோதரர் ஷேக்தாவூத் அவர்களுக்காகவும் துஆ செய்யபட்டுள்ளது. எங்கள் வருத்தத்தையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.