.

Pages

Thursday, August 22, 2019

புதுப்பொலிவுடன் பிலால் நகரை அலங்கரிக்கும் இறை இல்லம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 22
பிலால் நகரில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜித் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையையொட்டி அமைந்துள்ளது பிலால் நகர். இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகிய தொழுகைக்காக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வலர்களின் தீவிர முயற்சியில் கட்டி எழுப்பப்பட்டது ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜித்.

இப்பள்ளியில், தினமும் 5 வேளை தொழுகை, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதுதல் மற்றும் நல்லலொழுக்கப் பயிற்சியும், அவ்வப்போது மஹல்லாவாசிகளின் திருமண நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வர்ணம் பூசும் பணி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து முடிந்துள்ளது. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜிதின் அழகிய தோற்றம் தொழுகையாளிகளையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.

பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஒப்புதலின் பேரில், வர்ணம் பூசும் பணிக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்று நடத்திய அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத கொடையாளிக்கு இறைவன் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக என்று பள்ளிவாசல் மற்றும் மஹல்லா நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.