.

Pages

Tuesday, August 27, 2019

இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் மீனா குமாரி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் எம்.முகமது ஷகீல், எச்.ஆஷிக் அகமது, ஏ.ஆர் ரியாஸ் அகமது, வி. சக்தி ஆனந்தம், பி. அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர். முன்னதாக, தேசிய உறுதிமொழி ஏற்பை பள்ளி யூ.கே.ஜி மாணவன் என். முகமது அப்துல் ரஹ்மான் மழலை குரலில் இனிமையாக வாசித்தார். முடிவில், மாணவர்களுக்கான கூட்டு உடற்பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் கூறியது;
பாடப்புத்தகங்களை சுமப்பதன் சுமையை குறைப்பதற்கும், குழந்தைகளிடையே ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், நல்லொழுக்கத்தை வளர்க்கவும், வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று 'Book Free Tuesday' நிகழ்ச்சி பள்ளியில் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சரங்க நிகழ்ச்சிகள், வினாடி~வினா, அறிவியல் படைப்பாற்றல் போட்டி, ஆரோக்கியம், மாணவர்கள் ஒழுக்கம், பாதுகாப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் புரிதலை வளர்க்க உதவும்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.