அதிரை நியூஸ்: ஆக.12
அல்லாஹ்வின் பேரருளால் இவ்வருடமும் தியாகப் பெருநாளை அதிரை முஸ்லீம்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வழமைபோல் அதிரை ஈத் கமிட்டியினர் மேலத்தெரு சானாவயல் திடலில் ஏற்பாடு செய்திருந்த ஈதுல் அதுஹா சிறப்புத் தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு ஏகன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தனர்.
பெருநாள் சிறப்புத் தொழுகையை சகோதரர் ஹஸனார் அவர்கள் நடத்தி குத்பா பேருரையையும் நிகழ்த்தினார்கள். ஹஸனார் அவர்கள் தனது உரையில் தனி மனிதராக இருந்து கொண்டு தூய ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவற்காக பட்ட துன்பங்களை பட்டியலிட்டு நாம் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் குறித்தும் எடுத்தியம்பினார்கள்.
இறுதியாக, குத்பா நிறைவிற்குப்பின் தொழுகையில் கலந்து கொண்ட மக்கள் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து முடித்தபின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டவர்களாக சந்தோஷத்துடன் கலைந்து சென்றனர்.
அதிரை அமீன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.