.

Pages

Sunday, August 18, 2019

தஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் (படங்கள்)

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு தொடங்கியது. 

இத்திருவிழாவைத் தொடங்கி வைத்த வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேசியது:
தஞ்சாவூரில் 4 ஆம் ஆண்டாக நடைபெறும் புத்தகத்திருவிழாவில், 101 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. இத்திருவிழா தொடர்ந்து ஆக. 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான குரூப் 1, குரூப் 2 மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளத் தேவையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டப்படிப்பு முடித்தவுடன் போட்டித் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள இந்தப் புத்தகங்கள் பெரும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

பின்னர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகளை அமைச்சர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.