.

Pages

Monday, August 26, 2019

தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற டாக்டர் கமருல் ஜமான்!

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றும் டாக்டர் கமருல்ஜமான் அவர்களுக்கு தமிழக அரசு சிறந்த மருத்துவர் என்ற விருது வழங்கி சிறப்பித்தது.

கடந்த வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று மாலை சென்னை கிண்டியிலுள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் தமிழக அரசின் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் 497 தமிழக மருத்துவர்களுக்கு "சிறந்த மருத்துவர்" என்ற விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டிப் பேசினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான திட்டத்தில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தது நடப்பு ஆண்டில் 497 மருத்துவர்கள் என விரிவடைந்துள்ளது.

மேற்படி 497 பேரிலிருந்து 20 தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது, சான்றிதழுடன் ₹50,000 ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து விற்பன்னர்களாக திகழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம், அணைக்கரை அருகேயுள்ள கோணுழாம்பள்ளம் என்ற ஊரின் பள்ளிவாசல் தெரு அலாவுதீன் அவர்களின் குமாரரான டாக்டர் கமருல் ஜமான் அவர்கள் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக். மேல்நிலை பள்ளியில் பயின்ற எங்களுடைய பள்ளித்தோழர் என்பதுடன் இவருடைய வகுப்புத் தோழர் டாக்டர் இப்ராஹீம் ஷா அவர்கள் அறந்தாங்கியில் மருத்துவ சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் கமருல்ஜமான் அவர்கள் மக்கள் சேவையில் மென்மேலும் பல சிறப்புற்று உயர வாழ்த்துகிறோம்.

நண்பர் திருப்பனந்தாள் நவ்ஷாத் அவர்களின் உதவியுடன்
அதிரை அமீன்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.