.

Pages

Wednesday, August 28, 2019

உலமாக்கள் ~ முஅத்தீன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஆக.28
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை-புதுப்பித்தல்-நலத்திட்டம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்தல் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டதில் இவ்வாரியத்தில் மொத்தம் 454 நபர்கள் பதிவு பெற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டதின் மு்லம் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு பல நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது. பதிவு பெற்ற உறுப்பினர்கள் தங்களது பதிவினை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையானோர் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர், இதனால், பல்வேறு நலத்திட்டங்கள் வாரிய உறுப்பினர்கள் பெறமுடியாத                  நிலை ஏற்படுகின்றது. எனவே, நீண்டகாலமாக புதுப்பித்துக்கொள்ளத் தவறியவர்கள் புதுபித்துக்கொள்ளவதற்காக வருகின்ற 04-09-2019 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில், பதிவினை புதுபித்துக்கொள்ளவும், பதிவு அட்டை தொலைத்தவர்கள் ரூ.20 செலுத்தி புதிய அட்டை பெற்றுக்கொள்ளவும். மேலும். புதிய உறுப்பினராக சேரவிருப்பவர்களுக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், புதுப்பித்தல்-சேர்க்கை விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிவாசலில் பணிபுரிவதற்கான சான்று மற்றும் வஃக்ப் வாரிய கண்காணிப்பாளரின் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம் 2 உடன் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.